ஊட்டி, ஜன. 26: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் அணை அருகே இறந்த நிலையில் குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்கின்றன. இவைகள் தண்ணீரை தேடி நீரோடைகள் மற்றும் அணைகள் அருகே முகாமிட்டு தண்ணீர் குடிப்பது வாடிக்கை. சில சமயங்களில் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் சாலையில் சுற்றி திரிகின்றன.
இந்நிலையில், நேற்று முதுமலை புலிகள் காப்பதற்க்கு உட்பட்ட மாயார் அணை அருகே ஒரு குட்டி யானை இறந்து கிடப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், அங்கு சென்று அந்தக் குட்டி யானை உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இறந்தது ஆண் குட்டி யானை என தெரியவந்தது. தொடர்ந்து அப்பகுதியில் குட்டி யானை இறப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மாயார் அணை அருகே குட்டி யானை உடல் மீட்பு appeared first on Dinakaran.