‘மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கை காக்கவும்’ - அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

10 hours ago 3

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கொலைகளைப் பட்டியலிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Read Entire Article