மூன்று நாள் ஏற்றுமதி வாய்ப்பு அடையாளம் காணும் பயிற்சி 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

12 hours ago 4

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் ஏற்றுமதி வாய்ப்பு அடையாளம் காணும் பயிற்சி பயிற்சி வரும் 07.05.2025 முதல் 09.05.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032.

இந்த பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து பயன்படுத்துவதற்கான முக்கிய தகவல்கள், நடைமுறைகள் மற்றும் திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் முடிவில், பங்கேற்பாளர்கள் கீழ்காணும் திறன்களை நிபுணத்துவம் பெற முடியும்:

ஏற்றுமதி செயல்முறைகள், தேவையான விதிமுறைகளை புரிந்து கொள்ளமுடியும் ஆவணங்கள் மற்றும்
தரவுகளையும் வர்த்தக பகுப்பாய்வுகளையும் பயன்படுத்தி சாத்தியமான ஏற்றுமதி சந்தைகளை அடையாளம் காண்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

தமிழ்நாடு மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு பொருத்தமான துறை சார்ந்த ஏற்றுமதி வாய்ப்புகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்களை அறிதல். தங்களது வணிகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஏற்றுமதி தயார்நிலைச் (checklist) உருவாக்கல்.

சர்வதேச சந்தைகளில் நுழைய அல்லது விரிவடைய நடைமுறைசார்ந்த ஏற்றுமதி திட்டங்களை உருவாக்கல்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9360221280 / 9543773337, இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. அரசு சான்றிதழ் வழங்கப்படும், முன்பத்திவு அவசியம்.

The post மூன்று நாள் ஏற்றுமதி வாய்ப்பு அடையாளம் காணும் பயிற்சி 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article