மாமா வீட்டில் இல்லாத நேரத்தில் அத்தையுடன் தனிமையில் இருந்த வாலிபர்: உறவினர்கள் செய்த தரமான சம்பவம்

3 hours ago 2

பாட்னா,

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தை சேர்ந்தவர் மித்லேஷ் குமார் முகியா (வயது 24). இவருக்கும் அத்தை ரீட்டா தேவி (வயது 28) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மித்லேஷ்குமார், தனது மாமா சிவச்சந்திர முகியா வீட்டில் இல்லாத நேரத்தில் அத்தை ரீட்டா தேவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதை அந்த பகுதியை சேர்ந்த உறவினர்கள் சிலர் பார்த்து விட்டனர். சம்பவத்தன்று மித்லேஷ் குமார் அத்தையுடன் தகாத உறவில் ஈடுபட்ட போது அவர்கள் சரமாரியாக கட்டையால் தாக்கினார்கள். பின்னர் அத்தை ரீட்டா தேவியை வரவனழத்து மித்லேஷ்குமாருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.

மித்லேஷ்குமாரை சிலர் தாக்குவது போன்றும்,அத்தை ரீட்டா தேவிக்கு மித்லேஷ்குமார் குங்குமம் வைப்பது போலவும் காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து மித்லேஷ் குமாரின் தந்தை ராமச்சந்திரா போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகிறார்கள். ரீட்டா தேவிக்கு கணவர் சிவச்சந்திர முகியா மூலம் 4 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article