மாமல்லபுரம் அருகே மருத்துவர்களை கவுரவிக்கும் விழா ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவர்களுக்கு விருது: பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டும் : நடிகை கவுதமி பேட்டி

2 months ago 6

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் தமிழகத்தில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கி, 1000 அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா மற்றும் மாடல் அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழச்சி தனியார் அமைப்பு சார்பில் நடந்தது. இதற்கு, சமூக ஆர்வலர் திருநங்கை அப்சரா ரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், திரைப்பட நடிகை கவுதமி, சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், திரைப்பட நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு, 1000 அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவ துறையில் சாதனை படைத்த மருத்துவர்களை கவுரப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து அவர்களின் சாதனையை வாழத்தி புகழாரம் சூட்டினர். மேலும், பெண்கள் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தது. 30க்கும் மேற்பட்ட அழகிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்து ஆடை அலங்கார போட்டியில் பங்கேற்றனர். பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கவுதமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 2022ம் ஆண்டில் இருந்து குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. குரல் பேச தெரியாத, நடக்க தெரியாத மழலை குழந்தைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த, அரசு பாலியல் குற்றங்களை தடுத்து, அதில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்துக்கு இணையான சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு எப்போதுமே ஆளும் அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு நடிகை கவுதமி கூறினார்.

The post மாமல்லபுரம் அருகே மருத்துவர்களை கவுரவிக்கும் விழா ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவர்களுக்கு விருது: பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டும் : நடிகை கவுதமி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article