மாமல்லபுரம்: வடக்கு மாமல்லபுரம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் சார்பில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை வெண்மதி தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களாகிய நீங்கள் சாலை விதியை தெரிந்துகொள்ள வேண்டும். உங்களது தாய்-தந்தை பைக்கில் வெளியே செல்லும் போது ஹெல்மட் அணிந்து செல்ல சொல்லுங்கள். ஹெல்மட் அணியாமல் சென்று விபத்தில் இறந்தால், அவர்களின் குழந்தைகள் அநாதைகள் ஆகிவிடும் என்று பேசினர். தொடர்ந்து, ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவது, சாலை விபத்துகளை தவிர்ப்பது போன்ற பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
The post மாமல்லபுரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.