அகமதாபாத்: உடல் தகுதியை கருத்தில் கொண்டு ஐபிஎல்-ல் திரும்ப விளையாட வரலாமா? என்பது குறித்து முடிவு செய்வேன் என சென்னை – குஜராத் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பேட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திரும்பி வரமாட்டேன் என்றும் சொல்ல மாட்டேன், திரும்பி வருவேன் என்றும் சொல்ல மாட்டேன். ராஞ்சிக்கு செல்வேன். 4, 5 மாதங்கள் இருக்கின்றன. உடல் தகுதியை கருத்தில் கொண்டு ஐ.பி.எல்.-ல் திரும்ப விளையாட வரலாமா? என்பது குறித்து முடிவு செய்வேன். ஓய்வு குறித்து பேச இப்போது அவசரம் இல்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்” என எம்.எஸ்.தோனி கூறினார்.
The post உடல் தகுதியை கருத்தில் கொண்டு ஐபிஎல்-ல் திரும்ப விளையாட வரலாமா? என்பது குறித்து முடிவு செய்வேன்: ஓய்வு குறித்து தோனி பதில் appeared first on Dinakaran.