
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியுள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 2 நாட்களில் ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.