'மாமன்' படத்தின் முதல் நாள் வசூல்

4 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் நேற்று 'மாமன்' படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article