மான்டி கார்லோ டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு தகுதி

1 week ago 5

மான்டி கார்லோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஆர்தர் பில்ஸ் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற அல்காரஸ் அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 4-6, 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இவர் அரையிறுதியில் டேவிடோவிச் உடன் மோத உள்ளார்.

Read Entire Article