சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

9 hours ago 2

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 1ல் நேற்று கேட்பாரற்ற நிலையில் பை கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆர்.பி.எப். போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ஆர்.பி.எப் போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article