மான் வேட்டையாடிய வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார்

14 hours ago 2

கூடலூர், மார்ச் 21: தேனி மாவட்டம், கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 18ம் கால்வாய் தொட்டி பாலம் அருகே கடந்த ஜன.25ம் தேதி வேட்டையாடி கொல்லப்பட்ட மானின் தலை, உடல் ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் அங்கு நின்ற டூவீலரையும் கைப்பற்றி விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் நேற்று கூடலூரை சேர்ந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. மற்றொரு நபரான கூடலூர் சூளை மேட்டுத் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவரான ஹரிஹரன்(19) மான் வேட்டையாடியதில் தொடர்புடையது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், மேலும் 5 பேர் மான் வேட்டையில் ஈடுபட்டதும், சம்பவ இடத்தில் பிடிபட்ட டூவீலர் மான் வேட்டைக்கு வந்தவர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் மான் வேட்டையில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மான் வேட்டையாடிய வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article