இஸ்லாமாபாத்: இந்தியா உடனான சண்டையை நிறுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடைய செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு, ஜம்மு – காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் கடும் சேதம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஒப்பு கொண்டுள்ளது. இதனால் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் தாக்குதலால் கடும் அழிவுகளை பாகிஸ்தான் சந்தித்து வருவதாகவும் அதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் கடன் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், போர் பதற்றத்தால் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
The post தாக்குதலில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.. போர் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை!! appeared first on Dinakaran.