மானியத்தில் 5 கிலோ உளுந்து பெற்று வயல் வரப்பில் சாகுபடி செய்யலாம்: வேளாண் உதவி இயக்குநர் லதா தகவல்

1 month ago 5

 

திருவையாறு, அக். 17: வயல் வரப்பில் பயறு சாகுபடி செய்யலாம் என்று திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கு திருவையாறு வட்டாரத்தில் உப்புக்காச்சிப்பேட்டை, ராயம்பேட்டை, வளப்பக்குடி, கண்டியூர், முகாசா கல்யாணபுரம், வர கூர்,குழி மாத்தூர், கோனேரிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வயல் வரப்பில் பயறு சாகுபடி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை (நெல்), விசைத் தெளிப்பான் விநியோகம், தனிப்பட்ட விவசாயிகள் மற்றும் தொகுப்பில் உள்ள விவசாயிகளின் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுதல் ஆகியவை செயல் படுத்தப்படுகிறது.

The post மானியத்தில் 5 கிலோ உளுந்து பெற்று வயல் வரப்பில் சாகுபடி செய்யலாம்: வேளாண் உதவி இயக்குநர் லதா தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article