தமிழக சட்டப்பேரவைநடவடிக்கையை காண்பதற்காக நேற்று ஏராளமான மாற்று திறளாளிகள் தலைமை செயலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பேரவை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டப்பேரவை நடவடிக்கையை பார்த்தனர். தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டு காலங்களில் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க அம்சமாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் “உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பிரதிநிதித்துவம்” வழங்கிட சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மானியக்கோரிக்கை விவாதத்தை பார்ப்பதற்காக சட்டப்பேரவை மாடத்தில் மாற்றுத்திறனாளிகள்: முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.