புதுடெல்லி,
1956 நவம்பர் 1-ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன.
இந்தநிலையில் மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா, மத்திய பிரதேச, அரியானா,பஞ்சாப், அரியானா ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துகளை அந்த அந்த மொழியில் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
தமிழ்நாடு, ஆந்திரா,சத்தீஸ்கார், சண்டிகர், டெல்லி, அரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகிய மக்களுக்கு இன்று தனி மாநிலமாக உருவான நாள்.
பல மொழிகள், துடிப்பான கலாச்சாரம், வளமான வரலாறுகள் இந்தியாவின் வலிமையான இதயம். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, இந்த ஒற்றுமையைக் கொண்டாடுவோம்,பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இனி ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.