சென்னை: மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
“தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், “தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்று வரவேற்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.