மாநில தகுதித் தேர்வுக்கான 'ஹால்டிக்கெட்' வெளியீடு

7 hours ago 1

சென்னை,

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (செட்) குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு (மார்ச்) மாதம் 20-ந்தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநில தகுதித் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 6, 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) https://trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கணினி வழித் தேர்வுக்கான பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.

Read Entire Article