சென்னை: “கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது.