மாநில அளவிலான கராத்தே போட்டி

6 months ago 17

புழல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், செங்குன்றம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்பத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.கே.இனியன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம்‌ கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், ஷீல்டுகளும், கோப்பைகளும் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் புழல் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் அற்புதராஜ், சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கர்ணாகரன், மாவட்ட பிரதிநிதி புள்ளிலைன் ரமேஷ், புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாநில அளவிலான கராத்தே போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article