சென்னை: வானூர் தொகுதிக்குட்பட்ட கிளியனூரில் துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என சட்ட மன்றத்தில் வானூர் சக்ரபாணி கேட்டிருந்தார்
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி:
வானூர் தொகுதிக்குட்பட்ட கிளியனூரில் மொத்தம் 16MVA திறன் கொண்ட மின்மாற்றிகள் இயக்கத்தில் உள்ளன. இந்த மின்மாற்றிகளில் மொத்த நிறுவுதிறன் 14.65 MVA ஆகும். கிளியனூர் பகுதியின் மின் தேவையை பூர்த்தி செய்ய மேற்கொண்ட துணை மின்நிலையமே போதுமானதாக உள்ளது. இருந்த போது வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் வேண்டுகோளை ஏற்று துறையின் சார்பாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள மின் தேவையை கவனத்தில் கொண்டு தேவை ஏற்படின் முன்னுறிமை அடிப்படையில் அதற்கு முன்னுறிமை கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வானூர் தொகுதியில் கடலூர கிரமங்களில் பேரிடர்களின் போது புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்படைவதால் மேல்நிலை கம்பி புதைவட கம்பிகளாக மாற்றப்படுமா? வானூர் சக்ரபாணி கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி:
விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக தேவைப்படும் மின்தேவையை கவனத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2,571 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வானூர் தொகுதியில் 357 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேல்நிலை கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கோரிக்கை வைத்துள்ளார். முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் பணிகளை முழுமையாக 100 சதவீதம் நிறைவேற்றிட வேண்டும் என்றும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். படிப்படியாக அடுத்த நகராட்சி, பேரூராட்சிகளில் தேவைப்படும் இடங்களில் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
The post மாநகராட்சி பகுதி 100% முடிந்த பிறகு நகராட்சி, பேரூராட்சி தேவைப்படும் இடங்களில் புதைவட கம்பிகள் பதிக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.