மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை இடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

1 month ago 6

அண்ணாநகர்: அரும்பாக்கம் ஜானகி காலனியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோயில் உள்ளது. இதை அகற்றும்படி, அதே பகுதியை சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலை அகற்ற உத்தரவிட்டது.

அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் கோயிலை இடிக்க வந்தனர். அப்போது, பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அண்ணாநகர் துணை ஆணையர் சினேகா பிரியா, வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

 

The post மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை இடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article