மாதிரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

5 hours ago 2

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி, ஈசானி மூலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  மாதிரியம்மன் கோயில் 43ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மஞ்சலாடை அணிந்தவாறு சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பால்குடங்களுடன் பக்தர்கள் சன்னதி தெரு, பஜார் வீதி, கேதாரீஸ்வரர் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர், பக்தர்கள் தங்களது கரங்களால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

 

The post மாதிரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article