சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலும், மூலக்கடை சந்திப்பிலும் கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் மக்கள் அதிகாரிகளை அணுகி தீர்வு காணலாம்.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாதவரம் 200 அடி சாலையில் மாதவரம் ரவுண்டனா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் மற்றும் மூலக்கடை சந்திப்பில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.