டெல்லி: 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் 45.79 விழுக்காடு பங்களிப்பை சிறு, குறு தொழில்துறை வழங்கி இருந்ததாக ஒன்றிய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது. பல கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு என நாட்டின் முதுகெலும்பாக திகழும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை தற்போது பல பிரச்சனைகளுடன் தள்ளாடி வருகிறது. வாங்கும் திறன் குறைவு, பணம் தேக்கம், மூலப்பொருட்களின் விலையேற்றம், நிறுவனங்களை நடத்துவதற்கான செலவு அதிகரிப்பு, டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதி செலவினங்கள் அதிகரிப்பு.
கடன் வட்டி விகிதம் கூடுதலாக இருப்பது என பல பிரச்சனைகளை சந்திப்பதாக சிறு, குறு தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுக்க அறிவிப்புகள் இருக்க வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் வலியுறுத்தி உள்ளார். வேலை வாய்ப்பின்மை என்ற பிரச்சனையை களைவது சிறு, குறு, தொழில் நிறுவனங்களிடம் உள்ளது. எனவே சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 2024-25ல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45.9% பங்களிப்பு சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: ஒன்றிய புள்ளியியல் துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.