மாணவி பலாத்கார சம்பவம் தடைமீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது

3 weeks ago 4

சென்னை: சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முறையாக முன் அனுமதி பெறாததால், போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடத்த அனைவரும் வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடினர்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினை போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்தில் கலந்து கொள்ள காரில் வந்த சீமான் என மொத்தம் 200 பேரை கைது செய்து அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்தனர்.

சீமானை போலீசார் கைது செய்யும்போது அவரது கட்சியை சேர்ந்த சிலர் கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நேற்று மாலை போலீசார் விடுவித்தனர்.

The post மாணவி பலாத்கார சம்பவம் தடைமீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது appeared first on Dinakaran.

Read Entire Article