மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: நீட் பயிற்சி மைய உரிமையாளர் கர்நாடகாவில் பதுங்கலா?

3 months ago 20

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஜல் என்ற பெயரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் இந்த மையத்தை நடத்தி வந்ததுடன், பயிற்சியும் அளித்து வந்தார். அவர் மாணவர்களை பிரம்பாலும், மாணவிகளை காலணியாலும் தாக்கும் வீடியோ வெளியானது.

இதுதொடர்பான புகாரின் பேரில் உரிமையாளர் ஜலாலுதீன் அகமது மீது மேலப்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் ஜலாலுதீன் அகமது கேரள மாநிலத்தில் பதுங்கி இருந்ததாகவும், தற்போது அங்கிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு தப்பிச்சென்று பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Read Entire Article