மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

4 hours ago 1

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) சரிவில் இருந்து மீண்டு 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ராவை (பிலிப்பைன்ஸ்) வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-7 (7-2), 2-6 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான அனஸ்டாசியா செவஸ்தோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இதற்கிடையே உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், முன்னாள் சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

Read Entire Article