நாடு முழுவதும் அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

5 hours ago 3

புதுடெல்லி,

அடுத்த சில நாட்கள் நாட்டில் நிலவும் வெப்ப அலைகள் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு உள்ளது. வருகிற 30-ந் தேதி வரை வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மேற்கு மத்திய பிரதேசத்தில் 30-ந் தேதி வரை, கிழக்கு மத்திய பிரதேசத்தில் 27-ந் தேதி வரை, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்தில் 26-ந் தேதி வரை, பஞ்சாப், அரியாவில் 29-ந் தேதி வரை வெப்பம் காட்டமாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சத்தீஷ்கர், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் காரைக்காலில் நாளை வரை வெப்பம் மற்றும் ஈரமான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் இந்த நிலை 30-ந் தேதி வரை நீடிக்கும். டெல்லியில் 27-ந் தேதி வரை வெப்ப அலை வீசும்.

இந்த வெப்ப அலையின் அளவுகளை கணக்கிட்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Read Entire Article