புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தின் போக்குவரத்து துறையில் கடந்த 2015ம் ஆண்டு கருணை அடிப்படையில் காவலராக சவுரப் சர்மா நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் சர்மா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் சர்மாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த ரூ.30லட்சம் முடக்கப்பட்டது. மேலும் விளக்கமளிக்கப்படாத ரூ.12லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.9.17லட்சம் மதிப்புள்ள 9.9 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
The post மாஜி போக்குவரத்து காவலரின் ரூ.50 லட்சம் சொத்து பறிமுதல் appeared first on Dinakaran.