சிதம்பரம், ஜன. 21: நடராஜர் கோயிலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து, கோயிலில் உள்ள சிற்பங்களை ரசித்து பார்த்து சென்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் தினந்தோறும் வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அதிகளவில் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் நடராஜர் கோயிலுக்கு வந்தனர். முன்னதாக கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் சென்று நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தனர்.
பின்னர் அங்குள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதியிலும் வழிபட்டனர். இதையடுத்து ஆதிமூல நாதர், முருகர், சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிவகங்கை தீர்த்தகுளம் உள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களையும் பார்த்து வியந்தனர். அப்போது கோயில் வரலாறு பற்றிய சில தகவல்களை அங்கிருந்த பக்தர்களிடம் கேட்டு தெரிந்து ெகாண்டனர்.
The post நடராஜர் கோயிலில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் தரிசனம் appeared first on Dinakaran.