மாஜி எம்பி சஜ்ஜன் குமார் தொடர்புடைய சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜன.8 ம் தேதி டெல்லி கோர்ட் தீர்ப்பு

4 weeks ago 4

புதுடெல்லி: கடந்த 1984 அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட உடன் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின்போது டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கலவர கும்பலுக்கு மாஜி காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் தலைமை தாங்கி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வருடங்களாக நடந்து வந்த வழக்கில் 2021 டிசம்பர் 16 ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 8ம் தேதி நீதிபதி காவேரி பாவேஜா தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

The post மாஜி எம்பி சஜ்ஜன் குமார் தொடர்புடைய சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜன.8 ம் தேதி டெல்லி கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article