தேவையான பொருட்கள்:
மாங்காய் 1,
வெல்லம் 200 கிராம்,
வேப்பம் பூ – 2 தேக்கரண்டி,
கடுகு – 1 தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் 1,
எண்ணெய் – 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் – கால் கப்.
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர்விட்டு தோல் சீவி மெலிதாக நறுக்கிய மாங்காயை சேர்த்துக் கொள்ளவும். மாங்காய் நன்றாக வெந்ததும். ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வேப்பம் பூ சேர்த்து தாளித்து வெந்த மாங்காய் கலவையுடன் சேர்த்து அதனுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க விடவும். சுவையான மாங்காய் வேப்பம்பூ பச்சடி தயார்.
The post மாங்காய் வேப்பம்பூ பச்சடி appeared first on Dinakaran.