செங்கோட்டை: தமிழக – கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் கேரள அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த பேக் ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரையும், காரையும் தென்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், காரில் வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியன் என்பதும், கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும், ஆனால் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து பாண்டியனை போலீசார் கைது செய்த கேரள போலீசார் ஹவாலா பணம் ரூ.15.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
The post ரூ.15.10 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.