பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் மாகி பூர்ணிமாவையொட்டி நேற்று மாலை 6 மணி வரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினார்கள். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா வருகிற 26ம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனையொட்டி நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் மாகி பூர்ணிமாவையொட்டி நேற்றும் புனித நீராடுவதற்கு லட்சக்கணக்கானோர் குவிந்தனர். மாலை 6 மணி வரை மட்டும் சுமார் 2 கோடி பேர் புனித நீராடினார்கள்.
மாகி பூர்ணிமாவுடன் கல்பவாசிகளின் ஒரு மாத புனித நீராடல் முடிவுக்கு வருகின்றது. இதனை தொடர்ந்து கும்பமேளாவில் இருந்து சுமார் 10லட்சம் கல்பவாசிகள் வெளியேறத்தொடங்குவார்கள். முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து மாகி பூர்ணிமா நீராடலை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மாகி பூர்ணிமாவை முன்னிட்டு மகா கும்பமேளாவில் ஒரே நாளில் 2 கோடி பேர் புனித நீராடல் appeared first on Dinakaran.