தர்மபுரி, டிச.20: தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கரை அவமதித்து பேசிய, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராசன், முத்து, அருச்சுனன், விசுவநாதன், மல்லிகா, தனுசன், சக்திவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சேகர், தர்மபுரி நகர செயலாளர் ஜோதிபாசு, தர்மபுரி ஒன்றியம் கோவிந்த சாமி, பாலக்கோடு கார்ல் மார்க்ஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
The post மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.