மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

1 month ago 6

பெங்களூரு: இந்தியா – நியூசிலாந்து அணிகளிடையே பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியதில் நேற்று தொடங்க இரு முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம், கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதையடுத்து, இந்த டெஸ்ட் நான்கு நாள் அல்லது அதற்கும் குறைவாகவே நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நடைபெறும் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஃபாலோ ஆன் கொடுக்க 200 ரன் முன்னிலை தேவை என்ற நிலையில், இப்போட்டிக்கு அது 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 4 நாளும் காலையில் 15 நிமிடம் முன்னதாக தொடங்கும் ஆட்டம், மாலையில் 15 நிமிடம் கூடுதலாக நடக்கும். இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரு மைதானத்தில் நிமிடத்துக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் வகையிலான அதிநவீன ‘சப்-ஏர்’ வடிகால் வசதி இருந்தும், நேற்று பிற்பகலில் கொட்டிய கனமழையால் ஆட்டம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘ஹாவ்க்-ஐ’ தொழில்நுட்பத்துக்கு தேவையான 10 கேமராக்களை நிறுவுவதிலும் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்னையும் சரி செய்யப்பட்டு 2வது நாளான இன்று போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article