மழைநீர் வடிகால் பணிகள்: தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் - எடப்பாடி பழனிசாமி

7 months ago 25

சென்னை,

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள்தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!

எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க. ஐ.டி. விங் சார்பில் Rapid Response Team அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

#Fengal புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் @ChennaiRmc அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று… pic.twitter.com/XWarPTwngs

— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 30, 2024


Read Entire Article