ஊட்டி, மே 14: மலர் கண்காட்சி பாதுகாப்பு பணியில் 500 போலீசார் பயன்படுத்தப்படும் என நீலகிரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டு தோறும் கோடை காலமான மே மாதம் கோடை விடுமுறையை கொண்டாடவும், குளிர்ச்சியை அனுபவிக்கவும் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுபோன்று ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சுற்றுலா தலங்களிலும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பிற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு மேல் ஜூன் மாதம் வரை கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்படும்.
மேலும், சுற்றுலா தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீசார் மட்டுமின்றி, வெளி மாவட்ட போலீசாரையும் பயன்படுத்துவது வாடிக்கை. இந்நிலையில், கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை மலர் கண்காட்சி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. எனவே, அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வாய்ப்புள்ளது. போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது, ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து சீரமைப்பிற்காகவும் கூடுதல் போலீசார் ஈடுபடுத்துவது வழக்கம். மலர் கண்காட்சியின் ேபாது, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என 500 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இம்முறை முதல்வர் மலர் கண்காட்சி துவக்கி வைப்படும் நிலையில், பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊட்டி நகரில் அனைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பூங்கா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் வகையில், காவல் உதவி மையம் துவக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
The post மலர் கண்காட்சி பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு பணியில் 500 போலீசார் appeared first on Dinakaran.