மண்டபம் பேரூராட்சியில் பாலித்தீன் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பு

5 hours ago 3


மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலையோரம் பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளது. எஞ்சிய உணவு பொருட்களுடன் வீசப்படும் இந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. பாலித்தீன் பை கழிவு பொருட்களுடன் கிடக்கும் உணவை ஆடு, மாடுகள் உண்பதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பரவலாக பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை பயன்படுத்துவது தடுக்கப்பட்டு பசுமையான பகுதியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மண்டபம் கடல் சூழ்ந்த பகுதியாக உள்ளது.

தீவுகளும் அமைந்துள்ளது. கடல் வாழ் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக அமையும். ஆதலால் மண்டபம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை வழங்குவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மண்டபம் பேரூராட்சியை பிளாஸ்டிக், பாலித்தீன் இல்லாத பேரூராட்சியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post மண்டபம் பேரூராட்சியில் பாலித்தீன் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article