மலச்சிக்கல் தரும் மனச்சிக்கல்!

2 weeks ago 6

நன்றி குங்குமம் தோழி

மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். மலச்சிக்கலே வராது.

*தினமும் இரவு படுக்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

*உலர்ந்த திராட்சை ஆறு எடுத்து நன்கு மென்று தின்றால் போதும்.

*ஏதாவது ஒரு வகை கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*தினமும் இரவில் மூன்று பேரீச்சம் பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம்.

*ஒரு கப் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் போதும்.

*முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை சாறு எடுத்தும் குடிக்கலாம்.

*இரவு உணவிற்குப் பின் ஒரு பேரிக்காய் சாப்பிடலாம்.

*கொய்யாப்பழத்தை விதையுடன் ஒன்றை சாப்பிடலாம்.

*தினமும் ஒரு ஆரஞ்சு பழம் உரித்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

*பசலைக் கீரையை சாறு எடுத்து நூறு மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் போதும்.

*பப்பாளிப்பழம், அத்திப்பழம் இவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

*எலுமிச்சை சாற்றை வெந்நீரில் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வரலாம்.

*காலையில் பல் தேய்த்ததும் இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் இருக்காது. எளிய முறைகளை கடைபிடிப்போம். மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ்வோம்.

தொகுப்பு: அ.சித்ரா, காஞ்சிபுரம்.

 

The post மலச்சிக்கல் தரும் மனச்சிக்கல்! appeared first on Dinakaran.

Read Entire Article