மற்ற கட்சிகளையும் விஜய் மதிக்க வேண்டும்; தமிழிசை பேட்டி

3 months ago 28

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன.உங்கள் கட்சி புதிய கட்சி உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் இருக்கிறது.பெரியாரையும் கும்பிடுகிறார்கள் கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் அதாவது தி.மு.க. எதை செய்கிறதோ அதே போலத்தான் விஜய்யின் கட்சியும் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article