சென்னை: மறைமலை நகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. ரூ.37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
The post மறைமலை நகர் பகுதிகளில் விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.