டெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி நடைபெற்றது. யு.பி.எஸ்.சி. இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 1,009 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் தமிழ்நாட்டின் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.
The post ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.