கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக இபிஎஸ் – நயினார் சந்திப்பு

3 hours ago 1

சென்னை: கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் வருகை தந்தனர். அப்போது பேரவை நிகழ்வுகளுக்கு முன்னதாக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை வளாகத்தில், எதிர்கட்சித் தலைவர் அறைக்கு சென்று தனியாக சந்தித்து பேசினார்.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பிறகும், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகும் முதல்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, தாளவாய் சுந்தரம், பாஜக எம்எல்ஏ காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு அதிமுக – பாஜக கூட்டணியின் இணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான அடித்தளமாகவும் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக இபிஎஸ் – நயினார் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article