ரேஷன் கடைகளில் பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைப்பு

5 hours ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு. சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும். இதனிடையே, ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதனை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைக்கப்பட்டுள்ளது. அந்த எலக்ட்ரானிக் பில்லிங் கருவியில் ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது வரும். அதாவது இனி பொருட்கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குதான் பில்லும் வரும். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சரியான எடைக்கு பொருட்களை வைத்தே ஆக வேண்டும்.

Read Entire Article