மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக்கூடாது: சவுமியா சுவாமிநாதன்

2 hours ago 2

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக்கூடாது என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சார்பில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு நிலை என்பது மிக முக்கியமான விஷயம். கொரோனா போன்று உலக அளவில் பாதிப்பைக் ஏற்படுத்தக்கூடியது. சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இன்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வழங்குவதை மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்க மருத்துவமனைகளில் குழு அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தியதால் கரும்பூஞ்சை நோய். ஆன்டிபாயட்டிக் மருந்துகளை அதிக அளவு இந்திய மக்கள் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 10 பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். அளவுக்கு அதிகமாக ஆன்ட்டிபயாட்டிக் உட்கொள்வதால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றன.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தங்கங்களும் மருத்துவமனைகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது. நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவை அறிந்து பயன்படுத்தினால் நுண்ணுயிர் எதிர்ப்பு நிலையை தடுக்க முடியும். விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் நோய் தடுப்பு மருந்து பயன்பாடு முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

The post மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக்கூடாது: சவுமியா சுவாமிநாதன் appeared first on Dinakaran.

Read Entire Article