மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பரிபோன பிஞ்சு உயிர்...

3 months ago 14
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்க்க முயற்சித்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வாயலூர் பகுதியை சேர்ந்த துரைராஜின் மனைவி சுஜாதாவுக்கு இரண்டு செவிலியர்கள் மற்றும் உதவியாளர் பிரசவம் பார்க்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். 
Read Entire Article