மருத்​துவ​மனை​யில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் வீடு திரும்பினார்

1 month ago 4

சென்னை: சென்னை அப்போலோ மருத்​துவ​மனை​யில் நெஞ்​செரிச்சல் பிரச்​சினைக்கு சிகிச்சை பெற்று​வந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் உடல்​நிலை​யில் முன்னேற்றம் ஏற்பட்​ட​தால் வீடு திரும்பினார். சில தினங்​களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடி​யிருப்​பில் தங்கியிருந்​தார். நேற்று முன்​தினம் இரவு அவருக்கு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்பட்​ட​தால், சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள அப்போலோ மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார்.

மருத்​துவர்கள் குழு​வினர் பரிசோதனைகளை மேற்​கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்​சைகளை அளித்​தனர். இதுதொடர்பாக நேற்று காலை 10 மணிக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்​குநர் மருத்​துவர் ஆர்.கே.வெங்​கடாசலம் வெளியிட்ட செய்திக்​குறிப்​பில், “ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் நெஞ்​செரிச்சல் (அசிடிட்டி) காரணத்​தால் மருத்துவ​மனை​யில் அனும​தி​யாகி​யுள்ளார்.

Read Entire Article