சென்னை: மதுரவாயலில் எலக்ட்ரிக் பைக் எரிந்து தீக்காயமடைந்த 9 மாத குழந்தை உயிரிழந்தது. தனியார் நிறுவன ஊழியர் கவுதம், மின்சார வாகனத்துக்கு இரவில் சார்ஜ் போட்டுவிட்டு நேற்று காலையில் வந்து பார்த்துள்ளார். காலை எழுந்து பார்த்தபோது மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி, 9 மாத குழந்தை காயம் அடைந்தனர். படுகாயமடைந்த கவுதம் (31) மனைவி மஞ்சு (28), 9 மாத குழந்தை எழிலரசி நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 9 மாத குழந்தை எழிலரசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; கவுதம், அவரது மனைவி மஞ்சுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post எலக்ட்ரிக் பைக்கில் தீ – காயமடைந்த குழந்தை பலி appeared first on Dinakaran.